சான்: வேலையிட பாதுகாப்பு நினைவூட்டல் தொடர வேண்டும்

ஊழியர் ஒருவர் சமையலறையில் கொட்டிக் கிடக்கும் பொருட்க ளைப் பார்த்து, அதை அப்புறப் படுத்தி, சுத்தம் செய்தால் அங்கு அவருக்கும் அவரது சக ஊழியர் களுக்கும் விபத்து ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறான காட்சிகள் அடங் கிய மூன்று காணொளிகள், தேசிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் தொடர் பில் நாளை வெளியிடப்படும். வேலையிடப் பாதுகாப்பு, சுகா தார மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்வாண்டு இயக் கம், உயரத்திலிருந்து கீழே விழு தல், உடலுறுப்பைத் தூண்டாக்கும் விபத்துகளையும் விபத்து தொடர் பான விபத்துகளையும் தடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும். இவை கடந்த ஆண்டில் நடந்த வேலையிட விபத்துகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றன.

இவை தவிர இதர விபத்து களைத் தடுக்கும் வழிவகைகளை மாணவர்களும் பெரியவர்களும் இணையத்தில் பதிவேற்றம் செய் யப்பட்டுள்ள மின்-கற்றல் பாடங் கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். இல்லத்தில் பாதுகாப்பு, விளை யாட்டில் பாதுகாப்பு, சிறுவர்களுக் கான போக்குவரத்துப் பாதுகாப்பு, பெரியவர்கள் வழுக்கி, இடறி விழுதலைத் தடுக்கும் முறைகள் போன்றவை இந்தப் பாடங்களில் போதிக்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!