முதியோருக்கு உதவ 10,000 தொண்டர்கள் தேவை

டெக் கீ வட்டாரக் குடியிருப்பாள ராகக் கடந்த 24 ஆண்டுகளாக அங் மோ கியோ அவென்யூ 10ல் வசித்து வரும் 81 வயது சென் யுவே லுன், அண்டைவீட்டாருக்கு உதவி செய்து வருகிறார். இவரது அண்டைவீட்டாரான 75 வயது திருவாட்டி ஹஸ்னா சாலேவுக்கு வீட்டைச் சுத்தம் செய்ய உதவி தேவைப்படுகிறது. இவருக்கு ஆஸ்துமா, இதய நோய், முதுகு வலி இருப்பதால், வீட்டைத் துடைத்தால்கூட மூச்சுத் திணறல் ஏற்படும். திருவாட்டி சென்னும் திரு வாட்டி ஹஸ்னாவும் மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன் றம் முதியோருக்காக நடத்தும் திட்டங்களால் பயனடைந்து வரும் மூத்த குடிமக்களில் உள்ளடங் குவர். கடந்த நான்கு ஆண்டுகளில், வீட்டைச் சுத்தம் செய்தல், நட்பு கொள்ளுதல், வெளி இடங்களுக் குச் சுற்றுலா செல்லுதல் போன்ற வற்றுடன் இத்திட்டங்கள் விரிவ டைந்துள்ளன. இதற்கென தேவைப்படும் தொண்டூழியர்களின் எண்ணிக் கையை 10,000 ஆக உயர்த்த, 'முதியோர் கூட்டணி' எனப்படும் தொண்டூழியர் சேர்ப்பு நடவடிக் கையைச் சமூக மேம்பாட்டு மன்றம் நேற்று தொடங்கியது.

தெக் கீ வட்டாரத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் திருவாட்டி ஹஸ்னா சாலேயின் வீட்டுக்குச் சாயம் பூசுவதற்கு ஏதுவாக தொண்டூழியர்களுடன் பிரதமர் லீ சியன் லூங்கும் (நடுவில்) மெத்தைக்கு மேலே பிளாஸ்டிக் விரிப்பை விரிக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!