வெளிநாட்டவரை அறைந்த 70 வயது முதியவர் கைது

எம்ஆர்டி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சக பயணியான வெளிநாட்டவர் ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரைக் கன்னத்தில் அறைந்த 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இம்மாதம் 18ஆம் தேதி இரவு நடந்த இச்சம்பவம் குறித்து ஜோ டிமரினி எனும் அந்த அமெரிக்கர் நேற்று முன்தினம் புகார் கொடுத் தார் என்றும் போலிஸ் தெரிவித் தது. மதுபோதையிலிருந்தார் என்று சந்தேகிக்கப்படும் அந்த முதியவர் டிமரினியை நோக்கி கத்தியதும், அவரது தோழி இடைமறித்த போது முதியவர் அவரிடமும் உரக்க பேசி, மிரட்டினார். சமூக ஊடகங்களில் பரவிய இந்த 4 நிமிடம் 22 வினாடி காணொளி 1.2 மில்லியன் தடவை பார்க்கப்பட்டது. முதிய வரின் செயலுக்காக சிங்கப்பூரர் கள் டிமரினியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர்.