புதுப்பிக்கப்படவுள்ளது தோ பாயோ

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் 1964ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சிங்கப்பூரின் முதல் குடியிருப்பு நகரமான தோ பாயோ புதுப்பிக்கப் படவுள்ளது. தோ பாயோ வட்டாரத்துக்கான புதுப்பிப்புத் திட்டங்களைக் காட்டும் கண்காட்சியை பீஷான்= தோ பாயோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தற்காப்பு அமைச்சருமான இங் எங் ஹென் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மையத்தில் நேற்று திறந்து வைத்தார். புதுப்பிப்புப் பணிகள் அடுத்த ஐந்திலிருந்து பத்து ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வீவகவின் குடியிருப்பு வட்டாரங்களை மறுசீரமைக்கும் திட்டத்தின்கீழ் இந்தப் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறும்.

பொது வீடமைப்புத் திட்டங்கள் மட்டும் இன்றி தோ பாயோ நகருக்கே உரிய முக்கிய சின்னங்களைக் கருவாகக் கொண்டு வட்டாரம் எங்கும் பொது இடங்களில் இருக்கைகளும் மேசைகளும் வடிவமைக்கப்படும். கெல்டிகாட்டில் பத்து ஹெக்டர் நிலமும் தோ பாயோ ஈஸ்ட்டில் நான்கு ஹெக்டர் நிலமும் பொது வீடமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக் கான வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ பாயோவில் தற்போது 37,000 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. தோ பாயோ வட்டாரத்தில் தற்போது இருக்கும் வசதி கள் தொடர்ந்து இயங்கும். அதே சமயத்தில் புதிதாக இரண்டு பூங்காக்களும் அமைக்கப்பட இருக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!