சிங்கப்பூர்: ஆசியாவில் அமெரிக்க ஈடுபாடு அவசியம்

அமெரிக்காவுக்கு பயணம் மேற் கொண்டிருக்கும் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் செடோ னாவில் இருக்கும் மெக்கைன் கழகம் ஏற்பாடு செய்து நடத்திய செடோனா கருத்தரங்கில் கலந்து கொண்டார். வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் இதைத் தெரி வித்தது. செடோனா கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அமெரிக்காவின் தலைவர்களும் அனைத்துலகத் தலைவர்களும் அழைப்பு இருந்தாலொழிய அந்த வருடாந்திர கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியாது. அந்தக் கருத்தரங்கில் இடம் பெற்ற கலந்துரையாடலில் 'ஆசியா விலிருந்து ஒரு கண்ணோட்டம்' என்ற தலைப்பில் துணைப் பிரதமர் டியோ உரையாற்றினார். ஆசியா வில் அமெரிக்கா தொடர்ந்து இருந்துவர வேண்டியதன் முக்கி யத்துவத்தை அவர் வலியுறுத்திக் கூறினார்.

துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் (வலது) அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச் ஆர் மெக்மாஸ்டரை சந்தித்தார். வட்டார, அனைத்துலக நிலவரங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர். படம்: வெளியுறவு அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!