சாங்கி பயணிகள் வருகை அதிகரிப்பு

சாங்கி விமான நிலையம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 15 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அது 4.7 விழுக்காடு அதிகம். கடந்த மாதம், உலகின் பல பகுதிகளிலிருந்தும் சிங்கப்பூருக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. சாங்கி விமான நிலையத்திற்கு கடந்த மாதம் 5.11 மில்லியன் பயணிகள் வருகையளித்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 4.3 விழுக்காடு அதிகம்.

குறிப்பாக சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இங்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை ஆக அதிக ஏற்றம் கண்டது. ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு முதல் காலாண்டில் விமானப் பயணங்களின் எண்ணிக்கை இரண்டு விழுக்காடு அதிகரித்து 90,540 ஆனது. சாங்கி விமான நிலையம் கையாண்ட சரக்கின் எடை 6.2 விழுக்காடு உயர்ந்து 494,180 டன் ஆகப் பதிவானது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!