ஊட்ரம் ரோடு கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கி சாய்ந்தது

ஊட்ரம் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி ஒன்று சாய்ந்துவிட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ஒருவர் அனுப்பிய புகைப் படத்தில் சாலையை அடைக்கும் வகையில் வாகனம் ஒன்று இருப்பதைக் காண முடிந்தது. அதைச் சுற்றி பல ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர். பிற்பகல் 2.50 மணியளவில் தகவல் கிடைத்து அங்கு விரைந்த குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஊட்ரம் ரோடு, இயூ தோங் செங் சாலை சந்திப்பில் பாரந்தூக்கி சாய்ந்து கிடந்தது. இரண்டு தீ அணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர்ப் பீய்ச்சியடிக்கும் சாதனமும் தயார் செய்யப்பட்டது. இதற்கிடையே சம்பவத்தின் புகைப்படத்தை பலர் ஃபேஸ்புக் வாயிலாக பகிர்ந்துகொண்டனர். இவர்களில் ஒருவரான அரியன் இங், "மீட்புப் பணியாளர்களும் வழிப்போக்கர்களும் கூடியதால் போக்குவரத்து தாமதமானது," என்றார். பிற்பகல் 2.28 மணிவாக்கில் ஊட்ரம் ரோடு சம்பவம் குறித்து டுவிட்டர் மூலம் நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்தது. பாரந்தூக்கி விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

ஊட்ரம் ரோடு கட்டுமானத் தளத்தில் சாய்ந்து கிடக்கும் பாரந்தூக்கி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!