மூன்று நிலச்சொத்துகளைக் கையகப்படுத்திய ஆணையம்

சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து ஆணையம், மெர்பாத்தி ரோட்டில் உள்ள மூன்று நிலச்சொத்துகளை சட்டபூர்வமாக கையகப்படுத்தி யிருக்கிறது. இருப்பினும் மூன்று இடங்களில் குடியிருக்கும் உரிமையாளர்கள் இன்னமும் இடத்தை காலி செய் யாமல் உள்ளனர். மூன்று உரிமை யாளர்களும் தங்களுடைய சொத்துகளின் சாவியை ஒப் படைக்கவில்லை என்றும் கூறப்படு கிறது.

மெர்பாத்தி ரோட்டில் எண் 27, 29, 33 ஆகியவற்றில் குடியிருக்கும் உரிமையாளர்களுக்கு ஆணையத் தின் துணை தலைமை நிர்வாகி சைமன் ஓங்கும் இதர நான்கு அதிகாரிகளும் வெளியேற உத்தர விடும் கடிதத்தை வழங்கியிருந்த னர். இந்தக் கடிதத்திற்குப் பிறகு இவர்களுடைய அண்டை வீட்டினர் வெளியேறிவிட்டனர்.