தேசிய சேவை எல்லாருக்கும் நியாயமாக இருக்க வேண்டும்

தேசிய சேவைக்கு சிங்கப்பூரர் களின் ஆதரவை உறுதிப்படுத்த வேண்டுமானால் அந்தச் சேவை அனைவருக்கும் பொதுவானதாக, நியாயமானதாக இருக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சு வலி யுறுத்தி இருக்கிறது. தேசிய சேவையாற்றத் தவறிய தற்காக மூன்று பேருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் தண்ட னையை அதிகமாக்கி இருக்கிறது. இது பற்றி கேட்டபோது அமைச்சு இவ்வாறு விளக்கியது. தேசிய சேவைக்கு சிங்கப் பூரர்கள் அளிக்கும் மிக முக்கிய ஆதரவையும் கடப்பாட்டையும் உறுதிப்படுத்த இந்தக் கோட்பாடு கள் அவசியம் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் சிங் கப்பூர் குடிமக்கள் தேசிய சேவை யைத் தவிர்த்துக்கொள்ள அல்லது தாங்கள் விரும்பும் ஒரு காலகட்டத் தின்போது அந்தச் சேவையை ஆற்ற அனுமதித்தோமானால் தேசிய சேவையை ஆற்றும் பெரும் பாலான குடிமக்களுக்கு அது நியாயமான ஒன்றாக இருக்காது. இப்படி பாரபட்சம் இருக்கும் நிலையில், தேசிய சேவைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று அமைச்சின் பேச்சாளர் நேற்று விளக்கினார்.

தேசிய சேவையாற் றத் தவறிவிட்ட மூன்று பேருக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தண் டனையைவிட கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு முறையீடு செய்தது. அந்த முறையீட்டை மேல்முறை யீட்டு மன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தேசிய சேவையாற்றத் தவறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை, அவர் கள் எத்தனை காலத்திற்குத் தேசிய சேவையாற்றத் தவறியிருக் கிறார்களோ அந்தக் கால அளவை கருத்தில்கொள்ளவேண்டும் என்று மேல்முறையீட்டு மன்றம் குறிப் பிட்டது.

வந்தனக் குமார் சிதம்பரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!