நீதிமன்றத்துக்கு வெளியே மர்மப் பொருள்: தோட்டா என சந்தேகம்

அரசு நீதிமன்றக் கட்டடத் திற்கு வெளியே, அதன் பிரதான வாயில் அருகே நேற்று பிற்பகலில் சந்தேகத் திற்கு இடமான ஒரு பொருள் காணப்பட்டது. அது துப்பாக்கித் தோட்டா என்று நம்பப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஐந்து பேருக்கும் மேற்பட்ட போலிஸ் அதிகாரிகள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து புலன்விசாரணை நடத்தி னார்கள். ஓர் அதிகாரி அந்த இடத்தையும் பக்கத்து இடங்களையும் நேற்று பிற்பகல் 4 மணிக்கு படம் எடுத்தார். தரையில் இருந்த சிறு பொருள் ஒன்றையும் அவர் படம் எடுத்தார்.

சந்தேகத்திற்கு இடமான பொருள் காணப்பட்ட இடத்தில் அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்