அறிவுசார் சொத்து நிறுவனங்களுக்கு உதவ $1 பி. நிதித் திட்டம்

உலகச் சந்தையில் இடம்பெறும் வண்ணம் வலுவான சிங்கப்பூரின் அறிவுசார் சொத்து நிறுவனங் களுக்கு உதவ ஒரு பில்லியன் வெள்ளி மதிப்பிலான உதவித் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள் ளது. 'த மக்காரா இனோவேஷன் ஃபண்ட்' எனப்படும் இந்த நிதி யம் 'மக்காரா கேபிட்டல்' என் னும் தனியார் பங்கு நிறுவனமும் சிங்கப்பூர் அறிவுசார் சொத்து அலுவலகமும் இணைந்து உரு வாக்கி உள்ளன. சிங்கப்பூரின் புத்தாக்கத்தின ரும் நிறுவனங்களும் தங்களது திறன்களை சொத்துகளாக மாற் றுவதற்கு உதவும்பொருட்டு அறி விக்கப்பட்ட அறிவுசார் சொத்து அலுவலகத்திற்கான நடவடிக்கை களுள் இந்த நிதியமும் ஒன்று.

சிங்கப்பூர் அறிவுசார் சொத்து அலுவலகத்தின் வலுவான நிபு ணத்துவத்துடனும் மக்காராவின் வர்த்தக ரீதியிலான முதலீட்டு அணுகுமுறையுடனும் இது ஒன் றிணைந்திருக்கும் என அறி விக்கப்பட்டுள்ளது. 'மக்காரா இனோவேஷன் ஃபண்ட்' தென்கிழக்காசியாவின் முதல் தனியார் பங்கு முதலீட்டு நிதிஉதவித் திட்டமாகும். அறிவுசார் சொத்து என்னும் அம்சத்தின் அடிப்படையிலான அனைத்துலக நிறுவனங்களை யும் எல்லைதாண்டிய வட்டார விரிவாக்கத்திற்கான முதலீடு களையும் இது கண்டறியும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!