சமுதாயம், அடையாளம் குறித்த ஆய்வுக்கு நிதியுதவி

சிங்கப்பூர் பிள்ளைகளின் ஆரம்பகால பாலர்பருவ மேம்பாடு குறித்து ஆராய சமுதாய அறிவியலாளர்களுக்கு உதவ $8.5 மில்லியன் மதிப்பிலான புதிய தேசிய ஆய்வு தொடங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டும் 2020ஆம் ஆண்டும் நடத்தப்படவுள்ள ஆய்வில் ஆறு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட சுமார் 5,000 குடும்பங்கள் பங்கேற்கும். குழந்தைப் பராமரிப்பு, பாலர் பருவக் கல்வி, தொழில் நுட்பப் பயன்பாடு, குடும்ப மனவுளைச்சல் போன்றவை பிள்ளையின் மேம்பாடு, மீள்திறனை எவ்வாறு பாதிக்கின்றன என்பவை குறித்து ஆய்வில் கவனம் செலுத்தப்படும்.

ஆய்வுக்கு சமூக அறிவியல் ஆய்வு மன்றம் நிதி வழங்கும். சமூக அறிவியல் ஆய்வுப் பணிகளுக்காக 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சு ஒதுக்கும் $350 மில்லியன் தொகையில் இந்த நிதியுதவி ஒரு பகுதியாகும். ஆய்வுகளுக்காக நிதியுதவியாக 2020ஆம் ஆண்டு வரையில் கல்வி அமைச்சு $50 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இதில் $21 மில்லியன் ஆய்வுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!