உற்பத்தித் துறையில் வேலை தேட நிபுணர்களுக்கு புதிய உதவித் திட்டங்கள்

வேலைதேடும் நிபுணர்கள், நிர்வா- கிகள், மேலாளர்கள், தொழில்நுட்- பர்கள் (பிஎம்இடி) ஆகியோருக்கு கூடுதல் உதவி வழங்கப்பட வுள்ளது. ஊழியர்கள் புதிய தொழில்துறையில் வேலையில் சேர உதவ எட்டு புதிய வாழ்க்கைத்- தொழில் மாற்றுத் திட்டங்களை (பிசிபி) மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே நேற்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் துல்லிய பொறியியல் தொழில்துறையில் ஆரம்ப நிலையிலும் நடுநிலையிலும் உள்ள வேலையில் சேர விரும்பு- வோருக்கு உதவுவதில் கவனம் செலுத்தும். உற்பத்தித்துறையில் 900க்கும் மேற்பட்ட வேலைகளை நிரப்ப நிறுவனங்கள் ஊழியர்- களைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் தேவன் நாயர் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகத்தில் ஒரு நாள் வேலைவாய்ப்பு கண்காட்சியை திரு லிம் தொடங்கி வைத்தார்.

உற்பத்தித்துறை சிங்கப்பூரில் வேலைவாய்ப்புகளை வழங்குவ- தோடு பொருளியல் வளர்ச்சிக்கும் வித்திடும் முக்கிய தொழில்துறைகளில் ஒன்றாக இருப்பதாக நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.