அனைத்துலக இந்திய விற்பனை திருவிழா தொடங்கியது

'சிங்கப்பூர் அனைத்துலக இந்திய விற்பனை விழா' டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்சின் இசை விருந்து ராயல் கலெக்ஷன்ஸ் வழங்கிய மும்பையைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான சுமித் தாஸ் குப்தா படைத்த ஆடை, அலங்கார பவனி, கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று கோலா கலமாகத் தொடங்கியது. மே 1ஆம் தேதி திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த ஐந்து நாள் விற்பனைத் திருவிழாவில் 160 விற்பனையாளர்களின் 10,000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு குவிந்திருக்கும். காலை 1 0 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் கண்காட்சியில், வகைவகையான உணவு, ஆடைகள், அணி மணிகள், கைப்பைகள், வீட்டு உபகரணப் பொருட்கள், கை வினைப் பொருட்கள், பொம் மைகள், பளிங்கு, வெண்கலச் சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையால் வடிவமைக் கப்பட்ட தேக்கு மரச் சாமான்கள், நறுமணப் பொருட்கள், ஆயுர்வேத, ஆரோக் கியப் பொருட்கள், என பலவகை யானவற்றையும் குறைந்த விலை யில் வாங்கலாம். முக்கியமாக இங்கு இடம்பெற்றுள்ள மாம்பழ கிராமத்தில் பல வகையான மாம் பழங்களை வாங்கிச் சுவைக்கலாம்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெறும் விற்பனை திருவிழாவை நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிக்கா டான். (இடமிருந்து) 'டி ஐடியாஸ்' நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திருமதி பூர்ணிமா காமத், இலங்கைக்கான சிங்கப்பூரின் தூதரும் தமிழ் முரசின் தலைவருமான திரு எஸ். சந்திரதாஸ், ஜெசிக்கா டான், தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் ஜ. ராஜேந்திரன், சிங்கப்பூருக்கான இந்திய துணை தூதர் திருமதி பரமிதா திரிபாதி, 'தப்லா!' வார இதழின் ஆசிரியர் பெட்ரிக் ஜோனஸ். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!