கடலில் ரசாயனக் கசிவு பாவனைப் பயிற்சி

'ராஃபிள்ஸ் ரிசேர்வ்ட் அங்கரேஜ்' எனும் கடற்பகுதியில் ரசாயனத் திரவம் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று பெரிய இழுவைப் படகுடன் மோதிக் கொண்டதில், கப்பலில் உள்ள டன் கணக்கிலான ரசாய னத் திரவம் கடலில் கொட்டியது. மேலும் இந்த மோதலின் கார ணமாக அக்கப்பலின் இரண்டு சிப்பந்திகள் மயக்கமுற்றனர். கடல்துறை, துறைமுக ஆணை யம் நேற்று நடத்திய கூட்டு ரசாய னக் கசிவு பயிற்சியின் சூழ்நிலை இதுதான். ஆணையம் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தும் பாவனைப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப் பயிற்சியில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங் கப்பூர் போலிஸ் படை, வேளாண்- உணவு கால்நடை மருத்துவ ஆணையம், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உள் ளிட்ட 25 அமைப்புகளின் 150 அதிகாரிகள் பங்கேற்றனர்.

பெரிய கப்பலில் ஏற்பட்டிருக்கும் ரசாயனக் கசிவை அப்புறப்படுத்து கின்றது கடல்துறை, துறைமுக ஆணையத்தின் அவசரகாலப் படகு. படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!