காம்பீரின் கருணையுள்ளம்

புதுடெல்லி: இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் அண்மை யில் நிகழ்ந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலிஸ் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் உயிரிழந்தனர். தமிழ் நாட்டைச் சேர்ந்த நால்வர் அவர் களில் அடங்குவர். இந்நிலையில், நாட்டிற்காக இன்னுயிர் நீத்த அந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு முழுவதையும் தாம் ஏற்ப தாக அறிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரரான கௌதம் காம்பீர் (படம்).

"கடந்த புதன்கிழமை காலை செய்தித்தாட்களைப் புரட்டிய போது, மாவோயிஸ்ட் தாக்குதலில் மாண்ட இரு வீரர்களுடைய மகள்களின் படங்கள் என் மனத்தை உலுக்கின. அதில் ஒருவர், வீரமரணம் எய்திய தன் தந்தைக்கு வணக்கம் செலுத்து கிறார். இன்னொரு படத்தில், தந்தையை இழந்த வேதனையைத் தாங்க முடியாது அழுது அரற்றும் பெண்ணை உறவினர்கள் அணைத்துத் தேற்றுகின்றனர். அந்தத் தியாகிகளின் குழந்தை களுக்கான கல்விச் செலவு முழு வதையும் எனது அறக்கட்டளை ஏற்கும். இதற்கான பணிகளை எனது குழு தொடங்கிவிட்டது. விரைவில் மற்ற விவரங்களை அறிவிப்பேன்," என்று 'ஹிந்துஸ் தான் டைம்ஸ்' நாளிதழில் தான் எழுதும் கட்டுரையில் காம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!