உள்துறை அமைச்சுக் குழு அதிகாரிகளுக்கு ஜூலை முதல் பதவி உயர்வு வாய்ப்புகள்

உள்துறை அமைச்சில் அங்கம் வகிக்கும் மேலும் நான்கு அமைப் புகளின் அதிகாரிகளுக்கு வரும் ஜூலை மாதம் முதல் பதவி உயர்வு வாய்ப்புகள் கிடைக்க வழி வகுக் கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் சிறைத்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகிய வையே அந்த நான்கு அமைப்புகள். அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட பதவி நிலைத் திட்டத்தின் மூலம் இந்த நான்கு அமைப்புகளின் அதிகாரி கள் பலன் அடைவார்கள் என்று உள்துறை மூத்த துணை அமைச் சர் டெஸ்மண்ட் லீ நேற்று நடை பெற்ற உள்துறை அமைச்சு குழுவி னருக்கான டிப்ளோமா, தொழில் நுட்பக் கல்விக் கழகக் கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

இத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் போலிஸ் படையின் அதிகாரிகளுக்குக் கடந்த ஆண்டு பதவி உயர்வு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!