புளோக்கின் கீழ்த்தளத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பதின்ம வயதினர் கைது

உட்லண்ட்ஸ் அவென்யூ 5, புளோக் 363ல் கடந்த வியாழக் கிழமை இரவு 8.30 மணியளவில் சுற்றித்திரிந்து கலவரத்தில் ஈடுபட்ட 9 பதின்ம வயதினரைக் போலிஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனை- வரும் 14 முதல் 16 வயதுடையவர்கள் என்று கூறப்பட்டது. அந்த புளோக்கின் கீழ் போலிஸ் அதிகாரி களும் மாணவர்கள் சிலரும் இருப் பதைக் கண்ட ஒருவர், ஸ்டோம்ப் இணையத் தளத்திற்குத் தெரிவித் தார். “புளோக்கின் கீழ் சுற்றித்திரிந்த சிறுவர்கள் திடீரென ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

அவர்களில் சிலர் பள்ளிச் சீருடை- யுடன் காணப்பட்டனர். நான் வீடு வந்து சேர்வதற்கு முன், அந்த புளோக்கின் கீழ்த்தளத்தில் பெரும் கலவரமாக இருக்கிறது என்று எனது அம்மா கூறினார்,” என்றார் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர். இந்தக் கலவரம் பற்றி மாலை 5.37 மணிக்கு தகவல் கிடைத்த- தாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.