ஊழியர் பயிற்சி நிதியின் இலக்கு $200 மி.; இதுவரை $100 மில்லியன் திரண்டது

ஊழியர்கள் தங்களுடைய தேர்ச்சி களை மேம்படுத்திகொள்ள உத வும் தேசிய தொழிற்சங்கக் காங் கிரசின் பயிற்சி நிதிக்குச் சுமார் $25 மில்லியன் திரட்டப்பட்டு இருப்பதாக தொழிற்சங்கத் தலைவர் சான் சுன் சிங் நேற்று அறிவித்தார். இப்படி திரட்டப்படும் ஒவ் வொரு வெள்ளிக்கும் அரசாங்கம் மூன்று வெள்ளி கொடுக்கும் என்பதால் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் போதனை, பயிற்சி நிதியில் இன்றைய தேதியில் $100 மில்லியன் சேர்ந்திருக்கிறது. இந்த நிதிக்கு $200 மில்லியன் சேர்க்க வேண்டும் என்பது இலக்கு. இதில் பாதி நிறைவேறி விட்டது. இந்த நிதியை முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, தொழிற்சங்க உறுப்பினர்கள் பயிற்சி பெறுவதற்கு மானியம் கொடுக்கப்படும். இந்த மானியம், ஆண்டுக்கு அதிகபட்சமாக $250 ஆக இருக் கும். இதைப் பயன்படுத்தி தொழிற்சங்க உறுப்பினர்கள் 3,200க்கும் அதிக பயிற்சிப் படிப்பு களில் சேரலாம்.

தொழிற்சங்கத் தலைவர் சான் சுன் சிங் (மஞ்சள் உடை) தேசிய தொழிற்சங்க காங்கிரசின் மே தின பேரணியில் தொழிற்சங்க வாதிகளுடன் படம் எடுத்துக்கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!