பொருளியலும் சிறப்படையும் ஆட்குறைப்பும் இடம்பெறும்

சிங்கப்பூர் பொருளியல் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு நன்றாகச் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார். தொழிலாளர் தின பேரணியில் நேற்று திரு லீ உரையாற்றினார். இந்த ஆண்டு பொருளியல் 1% முதல் 3% வரை வளரும் என்றும் முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் இந்த ஆண்டு வளர்ச்சி, சென்ற ஆண்டின் 2% வளர்ச்சியைவிட சிறப்பாக இருக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார் அவர். அதேநேரத்தில் நிறுவனங்கள் உருமாறுவதால் ஆட்குறைப்புகள் தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். அமெரிக்கா வுக்கும் சிங்கப்பூருக்கும் இடைப் பட்ட உறவு இன்னமும் தோழமை மிக்கதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஏப்ரல் 30ஆம் தேதி தொலை பேசியில் தான் பேசியதாகவும் அது நல்ல உரையாடலாக இருந்த தாகவும் திரு லீ கூறினார்.

மேப்பிள்ட்ரீ பிசினஸ் சிட்டியில் செயல்படும் கூகல் நிறுவனத்தில் பிரதமர் லீ சியன் லூங், வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் முதலானோர். படம்: தொடர்பு தகவல் அமைச்சு