லாவோஸ் பிரதமர் இன்று சிங்கப்பூர் வருகை

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பை ஏற்று லாவோஸ் பிரதமர் தோங்லோன் சிசோலித் இன்று சிங்கப்பூர் வருகிறார். இந்த ஒரு நாள் வருகை, இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் தோழமை உறவுகளை மறுஉறுதிப்படுத்து வதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. டாக்டர் தோங்லோனுக்கு இன்று இஸ்தானாவில் அதிகார பூர்வ வரவேற்பு அளிக்கப்படும். அதிபர் டோனி டான் கெங் யாம், பிரதமர் திரு லீ ஆகியோரை அவர் சந்திப்பார். திரு லீ அவ ருக்கு விருந்தளித்துச் சிறப்பிப் பார்.

நன்யாங் பலதுறை தொழில் கல்லூரிக்கு லாவோஸ் பிரதமர் செல்வார். டாக்டர் தோங்லோன் சிங்கப்பூர் ஒத்துழைப்புச் செயல் திட்டத்தின் கீழ் 1998 நவம்பர் முதல் 1999 ஜனவரி வரை இந்த தொழில்கல்லூரியில் ஆங்கில மொழி படிப்பைக் கற்றார். இந்தச் செயல்திட்டத்தின் கீழ் சிங்கப்பூரின் தொழில்நுட்ப உதவிகளை ஆக அதிகமாக பெறும் ஆறாவது நாடு லாவோஸ். துறைமுக ஆணையத்திற்கும் டாக்டர் தோங்லோன் செல்வார். லாவோஸ்-சிங்கப்பூர் தொழில் துறையினருடன் கூடிய கருத் தரங்கில் அவர் கலந்துகொள்வார். லாவோஸ் அமைச்சர்கள் பலரும் அதிகாரிகளும் உடன் வருகிறார்கள். ஆர்க்கிட் மலர் ஒன்றுக்கு லாவோஸ் பிரதமரின் பெயர் சூட்டப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!