உலகப் பட்டியலில் இடம்பெற்ற ‘என்யுஎஸ்’

வர்த்தக நிர்வாக முதுநிலை பட்டக்கல்வி வழங்கும் உலகின் 50 சிறந்த வர்த்தகப் பள்ளிகள் பட்டியலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) 22வது இடத்தைப் பிடித்துள்ளது. ஃபைனல்‌ஷியல் டைம்ஸ் நாளேடு நடத்திய இந்த ஆய்வில் முதல் 50 இடங்களில் வந்த ஒரே தென்கிழக்காசிய பல்கலைக்கழகம் என்யுஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் கல்வி நிலையம் நடத்தும் பிரஞ்சு வர்த்தகப் பள்ளியான 'இன்சாட்' பட்டியலில் ஆறாம் இடத்தைப் பெற்றது. பட்டியலில் முதல் இடத்தை ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் ஸ்டான்ஃபர்ட் வர்த்தகப் பள்ளி பிடித்தது. அப்பள்ளியின் வர்த்தக நிர்வாக முதுநிலை பட்ட தாரிகள் ஆண்டுக்கு USS266,000 (S$370,900) என்று ஆக உயர்ந்த சம்பளம் பெறுகிறார்கள் என்றும் ஒப்புநோக்க என்யுஎஸ் பட்டதாரிகள் ஆண்டுக்கு USS132,000 பெறுகிறார் கள் என்றும் ஆய்வு கூறுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!