எஸ்ஐஏ பசுமை விமானம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ), தன்னுடைய சான் பிரான்சிஸ்கோ-சிங்கப்பூர் வழி நில்லாச் சேவை வழித்தடத்தில் மூன்று மாத காலத்திற்கு 12 பசுமைத் திட்ட விமானங்களைச் சேவையில் ஈடுபடுத்தத் தொடங்கி இருக்கிறது. சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணை யத்துடன் சேர்ந்து அது இவ்வாறு செய்கிறது. விமானங்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத் துக்கொள்ள இடம்பெறும் உலக முயற்சியில் தனக்குள்ள கடப் பாட்டை நிறைவேற்றும் வகையில் சிங்கப்பூர் இதனைச் செய்கிறது.

சிங்கப்பூர் நிறுவனத்தின் ஆகப் புதிய, எரிபொருளை மிக வும் சிக்கனமாகப் பயன்படுத்தக் கூடிய விமானம் ஏர்பஸ் A350- 900 ஆகும். இந்த விமானங்கள் உயிர்ம எரிபொருளைப் பயன்படுத் தும் உலகின் முதல் விமானங்கள். இந்த விவரங்களை எஸ்ஐஏ நிறு வனமும் இந்த ஆணையமும் நேற்றுக் கூட்டாகத் தெரிவித்தன. பசுமைத் திட்ட 12 விமானங் களில் முதல் விமானமான எஸ்கியூ31, சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து மே 1ஆம் தேதி முற்பகல் 11.21 மணிக்கு (சான் பிரான்சிஸ்கோ நேரம்) புறப்பட்டு மே 2ஆம் தேதி இரவு 7.10 மணிக்கு 200 பேருடன் சிங்கப் பூரில் தரையிறங்கியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!