சாங்கி விமான நிலையத்துக்கு ஊக்கம்

ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நெடுந் தொலைவு விமானச் சேவையை நடத்தும் நிறுவனம் நார்வேஜியன். இந்த நிறுவனம் கடந்த செப்டம்பரில் சிங்கப் பூருக்கும் லண்டனின் கெட்விக் விமான நிலையத்துக்கும் இடையில் பறக்கத் தொடங்கியது. இத்தகைய நெடுந்தொலைவு, அதாவது 10,841 கி.மீ.மலிவுக் கட்டண விமானச் சேவை எதுவும் இதுநாள்வரை தொடங்கப்பட்டதில்லை. கெட்விக் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இந்த விமானம் மூலம் 13 மணி நேரத்தில் வரலாம்.

சிங்கப்பூரில் இருந்து அங்கு செல்ல 14 மணி பிடிக்கும். லண்டன்-சிங்கப்பூர் இடையே சேவை தொடங்கப்பட்டு இருப்பதால், அனைத்து வகை விமானச் சேவைக்கும் பெயர் பெற்ற மையம் என்ற சிங்கப்பூரின் நிலை இன்னும் மேம்படும். இதன் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்கள் பயணிகளுக்குதக் கவர்ச்சியான கட்டண ஏற்பாட்டைக் கைகொள்ள நெருக்குதல் இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!