சுடச் சுடச் செய்திகள்

போலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முனைந்தவருக்கு சிறை

போலிஸ் அதிகாரி வேண்டாம் என்று மறுத்தபோதும் அவருக்கு விடாப்பிடியாக $30 லஞ்சம் கொடுக்க முனைந்த மலேசியா கட்டுமான ஊழியர் சாங் ஜியா வெங்கிற்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது தலைக்கவசத்தின் வாரை கட்டாத குற்றத்திற்கு அழைப் பாணை கொடுக்காமல் இருப்ப தற்காக ஸ்டாஃப் சர்ஜண்ட் ஸுல்கிஃப்லி ஸகாரிக்கு சட்ட விரோதமாக ‘காப்பி காசு’ கொடுக்க முனைந்ததாக 30 வயது சாங் ஜியா மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜோகூரில் வசிக்கும் சாங், நிறுவனத்தின் தேவையைப் பொறுத்து வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று தடவைகள் சிங்கப் பூருக்கு வருவார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் புக்கிட் தீமா விரைவுச் சாலையில் சாங் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பணியில் இருந்த ஸ்டாஃப் சர்ஜண்ட் ஸுல்கிஃப்லி சாங்கின் தலைக்கவச வார் கட்டப்படாது இருந்ததைக் கவனித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon