இன உணர்வை மதிக்காத நாடகம்: மீடியாகார்ப்

நிறுவனத்திற்கு $5,500 அபராதம் இன உணர்வுகளை மதிக்காத தன்மையைக் கொண்ட கருத்து களைக் கொண்ட உள்ளூர் நாடகத்தை ஒளிபரப்பியதற்காக மீடியாகார்ப் நிறுவனத்திற்கு $5,500 விதித்துள்ளது தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ). இந்த நாடகம் டோகலில் ஒளிபரப்பானது. தேவையின் அடிப்படையில் பதிவிறக்கம் செய்து பார்க்கக் கூடிய 'ஐ வாண்ட் டு பீ ஏ ஸ்டார்' என்ற சீன மொழி வீடியோ நாடகமான இது, நிகழ்ச்சி நெறிமுறைகளை மீறி யதற்காக இந்த அபராதம் விதிக் கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது. கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி முதன் முதலில் இந்த நாடகம் டோகலில் ஒளிபரப் பானது. இதில் சியூ சோர் மெங் என்ற பிரபல நடிகர் நடித்த பாத் திரம், இந்தியர்களும் ஆப்பிரிக்க இனத்தவர்களும் ஒரே மாதிரி யானவர்களே என்று கூறினார். அத்துடன், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தியரை ஆப்பிரிக்கராகச் சித்திரித்தால் எந்த வித்தியாசமும் தெரியாது என்றும் கூறினார். அத்துடன் அந்த நாடகத்தில் சூவின் மகனாக வருபவர் ஆப்பிரிக்கரைப் போல் போலி முடி அணிந்து, கறுப்பு நிறத்தில் முக ஒப்பனை செய்திருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!