சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் கம்போடிய பிரதமர்

முப்பதாண்டுகளுக்கும் மேலாக கம்போடியப் பிரதமராக உள்ள ஹுன் சென் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 64 வயது ஹுன் சென், அதிக சோர்வினால் தாம் நோய் வாய்ப்பட்டிருப்பதாகவும் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவ தாகவும் கூறினார். புதன்கிழமை முதல் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுவதாகவும் ஞாயிறு அன்று கம்போடியா திரும்பி பணிகளைத் தொடர இருப்பாகவும் அவர் கூறினார். குடும்பத்தினருடன் ஹுன் சென் மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் படங்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் ஹுன் சென். படம்: ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!