மரபுடைமை விழாவில் சேலைக் கடல்

சிங்கப்பூர் மரபுடைமை விழாவை முன்னிட்டு லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேன், கலை களஞ்சியமாக மாறவுள்ளது. கலைக் கண்காட்சிகள், மேடை நாடக நிகழ்ச்சிகளை விழாவின் போது மக்கள் கேம்பல் லேனில் கண்டு ரசிக்கலாம். கண்ணைப் பறிக்கும் நிறங் களில் விதவிதமான வடிவமைப்பு களிலான சேலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட 'சீ ஆஃப் சாரிஸ்' எனும் கலைப் படைப்பு கேம்பல் லேனுக்கு மேலும் அழகு கூட்டும். வண்ணச் சேலைகளைப் பார்த்து மகிழ்வதுடன் புகைப்படம் எடுக்கவும் மக்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். இந்திய மரபுடையமை நிலையத் திற்கு வெளியே அமைக்கப்பட்ட உயரமான கம்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த சேலை படைப்பு, நிலையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங் களின் ஓரங்கமாகவும் அமைந் துள்ளது. சுமார் 140 சேலைகளைக் கொண்ட இந்தப் படைப்பு வெயிலா லும் மழையாலும் பழுதடையாமல் இருக்க பிளாஸ்டிக் தாட்களால் உருவாக்கப்பட்டதாகக் கூறினார் இந்திய மரபுடைமை நிலையத்தின் துணை நிர்வாகி குமாரி மேனகா கோபாலன், 32.

கேம்பல் லேனை சேலைக் கடலாக்கியுள்ள பிளாஸ்டிக் தாட்களால் ஆன வண்ணச் சேலைகளின் அலங்காரத் தோரணம். படம்: இந்திய மரபுடைமை நிலையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!