1,305 வீடுகளில் எரிவாயு சேவைத் தடை

ஜூரோங் வெஸ்ட்டில் நேற்று 1,300க்கு மேற்பட்ட வீடுகளில் எரிவாயு சேவைத் தடங்கல் ஏற்பட்டது. நிலத்தடிக் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக பிற்பகலில் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 65ல் 12 வீவக புளோக்கு களில் எரிவாயு சேவை பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சேதமடைந்த நிலத்தடி குழாயைச் சரிசெய்யும் பணியில் குத்தகையாளர் ஒருவர் ஈடு பட்டிருந்த வேளையில் பிற்பகல் 3.14 மணிக்கு சேவைத் தடங்கல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எரிவாயுக் கசிவைத் தொடர்ந்து புளோக் 663டி=யின் வெற்றுத் தளத்தில் தீப்பிடித்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப் போரின் பாதுகாப்புக்கு முக்கியத் துவம் கொடுத்து உடனடியாக அந்தப் பகுதிக்குப் பொறியாளர்கள் அனுப்பப்பட்டதாக எஸ்பி குழுமம் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!