நியூசிலாந்து விபத்து: சிங்கப்பூரர்கள் பலி

நியூசிலாந்தில் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் சிங்கப்பூரை சேர்ந்த ஆடவர் ஒருவரும் மாது ஒருவரும் நேற்று முன் தினம் உயிரிழந்தனர். அந்த இரு சிங்கப்பூரர்களும் வாடகை வேன் ஒன்றை ஓட்டிக்கொண்டிருந்தபோது எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது அவர்கள் மோதியதாக நியூ சிலாந்தின் செய்தி நிறுவனம் ஒன்று நேற்று குறிப்பிட்டது. கிரைஸ்ட்சர்ச் நகரிலிருந்து 40 கி.மீ. தெற்கு உள்ள டன்சன்டெல் நகரில் பகல் 1.12 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்தில் மாண்ட அந்த இருவரும் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்கவர்கள். கை காயங்களுடன் மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். விபத்தில் மாண்ட அந்த இருவரின் குடும்பங்களுக்கு வெளியுறவு அமைச்சு உதவி வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!