புதிய போர்க்கப்பல் செயல்முறை தொடக்கம்

சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் முதல்தர 'லிட்டோரல் மிஷன் வெஸல் (எல்எம்வி) ஆர்எஸ்எஸ் இண்டி பெண்டன்ஸ்' போர்க்கப்பல், நாட்டின் நீர்நிலைகளையும் கடல் வழி தொடர்புகளையும் பாதுகாத்து, வட்டார அமைதிக்கும் பாதுகாப் புக்கும் பங்களிக்க நேற்று முழுமை யாகச் செயல்படத் தொடங்கியது. சாங்கி கடற்படைத் தளத்தில் நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் 50வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கப்பலின் செயல்பாட்டைத் தொடங்கி வைத் தார் பிரதமர் லீ சியன் லூங்.

புதிய போர்க்கப்பல் 2015 ஜூலை மாதம் முதன்முதலில் அறி முகமானது. கடற்படையின் 11 ஃபியர்லஸ் தர கண்காணிப்புக் கப்பல்களுக்குப் பதிலாக 2020ம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங் கவிருக்கும் எட்டு எல்எம்வி கப் பல்களில் இது முதலாவது. புதிய கப்பலின் பெயர் குறிப் பிடத்தக்கது, வரலாற்று முக்கியத் துவமிக்கது என்றார் பிரதமர் லீ. "சிங்கப்பூரின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது கடற்படையின் அடிப் படை இலக்குகளில் ஒன்றாக எப் போதும் இருந்து வருவது குறிப் பிடத்தக்கது. இன்டிபென்டன்ஸ் என்ற பெயரில் கடற்படை முன் னோடிகளின் நினைவுகளும் ஊக்கமும் உள்ளடங்கியிருப்பதால் வரலாற்று முக்கியத்துவமிக்கது," என்றார் அவர்.

'ஆர்எஸ்எஸ் இண்டிபெண்டன்ஸ்' போர்க்கப்பல் சிறப்பாகச் செயல்பட சிங்கப்பூரின் சமயத் தலைவர்களும் நேற்று வழிபாடு நடத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!