இலக்கை நோக்கி தமிழ்மொழி விழா

தமிழ் அதிகம் பேசாத, புழக்கம் இல்லாதவர்களிடையே மொழி ஆர்வத்தை ஏற்படுத்தி, தமிழை வளர்க்கும் நோக்கத்துடன் 11 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங் கப்பட்டது வளர்தமிழ் இயக்கம். ஒன்றிணைந்து, உற்சாகமாக, துடிப்போடு தமிழை வளர்க்க சமூ கத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்மொழி விழாவை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது இந்த இயக்கம். இளையர் ஈடுபாடு அதிகரிப்பு ஒரு மாத விழாவில் இந்த ஆண்டு சாதனை அளவாக 52 நிகழ்ச்சிகள். முடிந்தவரை அனைத்து நிகழ்ச்சி களிலும் பங்கேற்றவர்களில் ஒரு வரான சிங்கையின் மூத்த எழுத் தாளர் திரு ஏ.பி. ராமன், 85, கூறுவதுபோல, மாணவர்களின் ஈடுபாடு கடந்த ஆண்டுகளின் விழாக்களைவிட வேறுபட்டதாக அமைந்திருந்தது.

'700 ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூர்', 'திருக்குறள் விழா', 'நாடாளுமன்றப் பயணம்' என கிட்டத்தட்ட 30 நிகழ்ச்சிகள் இவ்வாண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வழக்கமான போட்டிகளுடன் இணையக் கலைக்களஞ்சியமான 'விக்கிபீடியா'வுக்கு தகவல் கட் டுரை எழுதுவது, கவிதை மனனம் போன்ற வித்தியாசமான போட்டி களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சிற்பிகள் மன்றம் ஏற்பாடு செய்த 'நாடாளுமன்றப் பயணம்' நிகழ்ச்சியில் மாணவர்கள் புதிர்ப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அதன்பின்னர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயருடனான கேள்வி பதில் அங்கத்திலும் அவர்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்றனர். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!