பேருந்து மோதி மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

சிம் லிம் டவர் கட்டடத்துக்கு அருகே நேற்று பிற்பகல் நிகழ்ந்த விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க மோட்டார் சைக்கி ளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அந்த விபத்தில் பேருந்து ஒன்று ஈடுபட்டது. 'சிங்கப்பூர்-=ஜோகூர் எக்ஸ்பிரஸ்' பேருந்துக்கு அருகே நீல நிறமுடைய போலிஸ் கூடாரம் ஒன்று இருந்ததை ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ஒருவர் அனுப்பிய காணொளிகளும் புகைப்படமும் காட்டின. அந்தப் பேருந்து முனையத்திற்குத் திரும்பியபோது அந்த விபத்து நிகழ்ந்ததாக அந்த வாசகர் கூறினார்.

பான் சான் ஸ்திரீட்டில் பிற்பகல் 2.45 மணியளவில் நடந்த அந்த விபத்து பற்றி தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக சிங் கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. இதற்கிடையே, ஹேவலாக் ரோட்டில் கடந்த வியாழன் இரவு 11.20 மணியளவில் போலிஸ் வேன் ஒன்று மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் லேசாக காயமுற்றார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட மறுத்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று கூறியது. சம்பவ இடத்திற்கு அருகே இருந்த வழிப்போக்கர் ஒருவர், யாரோ ஒருவர் கத்தும் சத்தம் தமக்குக் கேட்டதாக ஸ்டோம்ப் இணையத்தளத்திடம் கூறினார். இவ்விபத்து குறித்த போலிஸ் விசா ரணை தொடர்கிறது.

பான் சான் ஸ்திரீட்டில் வளையும்போது பேருந்து மோட்டார் சைக்கிளோட்டியை மோதித் தள்ளியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!