‘நலமான அம்மா, நலமான குடும்பம்’ கருத்தரங்கில் 200 பெண்கள் பலன்

சிங்கப்பூரில் பெண்களிடையே இதய நல புரிந்துணர்வை மேம் படுத்தும் நோக்கத்தில் சிங்கப்பூர் இதய அறநிறுவனம் நேற்று 'நல மான அம்மா, நலமான குடும்பம்' என்ற கருத்தரங்கை நடத்தியது. பெண்கள் தங்களுக்கேற்படக் கூடிய இதயக் கோளாறுகளைத் தவிர்த்துக்கொள்ள உதவியாக அவர்களிடையே புரிந்துணர்வை மேம்படுத்துவதிலும் வீட்டில் இத யத்துக்கு உகந்த சாப்பாட்டுப் பழக்கங்களை இளம் வயதிலேயே பிள்ளைகளிடம் ஏற்படுத்த ஊக்க மூட்டுவதிலும் கருத்தரங்கு முக் கிய கவனம் செலுத்தியது. நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கருத்தரங்கில் சுமார் 200 பெண்கள் பங்கெடுத் துக் கொண்டு பலன் அடைந்தனர்.

வாழ்க்கையில் இதய நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி திரு வாட்டி ஹலிமா பெண்களைக் கேட்டுக்கொண்டார். உலக அளவில் பார்க்கையில் இதய நோயும் வாதமும்தான் பெண்களிடையே மரணத்துக்கும் உடற்குறைக்கும் முக்கிய கார ணங்களாக இருந்துவருகின்றன. சிங்கப்பூர் பெண்களிடையே மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முன்னணி காரணங் களில் இதய நோய் ஒன்று என் பதை பெண்களில் 10 விழுக் காட்டினர் மட்டுமே தெரிந்து கொண்டுள்ளனர். சிங்கப்பூர் பெண்களிடையே இதய நல புரிந் துணர்வை மேம்படுத்த முயற்சிகள் தொடரவேண்டும் என்பதையே இந்த நிலவரம் காட்டுகிறது. கருத்தரங்கைத் தொடர்ந்து இதயத்துக்கு நலமான உண வுகளைத் தயாரிப்பதைப் போதிக் கும் பயிலரங்கு நடந்தது. சிங்கப்பூரில் பெண்களிடையே இதயநல புரிந்துணர்வை மேம்ப டுத்தும் நோக்கத்தில் இதய நல அறநிறுவனம் ஆண்டுதோறும் இத்தகைய கருத்தரங்கை நடத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!