கொண்டோமினிய வீட்டில் தீ

சுவா சூ காங்கில் உள்ள பாம் கார்டன்ஸ் கொண்டோமினியத் தின் 4ஆம் மாடியில் உள்ள வீட் டில் நேற்று பிற்பகல் 1.30 மணி வாக்கில் தீ மூண்டது. அந்த வீட்டில் படுக்கை அறை பொருட்களில் தீ பிடித்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீ பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர் களில் சுமார் 20 பேர் தாமாகவே கட்டடத்தை விட்டு வெளியேறி னர். நீரைப் பீய்ச்சியடிக்கும் சாத னம் மூலம் தீ அணைக்கப்பட் டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது.