முதியோர் இல்ல காதல்; திருமண வாழ்வில் சங்கமம்

சாய் சீயில் இருக்கும் சன்லவ் முதியோர் நிலையத்தைச் சேர்ந்த திருவாட்டி மரியா அப்துல் ஹமிது, 70, என்ற மாதும் திரு இஸ்மாயில் சபுவான், 62, என்ற பெரியவரும் மார்ச் மாதம் முதன் முதலாகச் சந்தித்தார்கள். கண்ட உடனேயே இருவரும் காதல் வலையில் விழுந்துவிட்டார்கள். ரத்தக் கொதிப்பு, சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட இவர் கள், சேர்ந்தே மருத்துவமனைக் குப் பலமுறை சென்றார்கள். கேலாங், சாங்கி வில்லேஜ் போன்ற இடங்களில் உள்ள உணவு நிலையங்களுக்குச் சேர்ந்து சென்று சாப்பிட்டார்கள். இவர்கள் இப்படியெல்லாம் சேர்ந்து பழகப் பழக இருவருக் கும் இடையில் மலர்ந்த காதல் இருவரையும் பிரிய முடியாத அளவுக்கு இல்லற வாழ்க்கை கதவைத் திறந்து விட்டது. திரு வாட்டி மரியாவுக்கும் திரு இஸ் மாயிலுக்கும் நேற்று அல் அன்சா பள்ளிவாசலில் திருமண நிகழ்ச்சி நடந்தது. நண்பர்களும் சன்லவ் விடுதி தொண்டூழியர்களும் நிகழ்ச்சி யில் கலந்துகொண்டார்கள்.

புதுமண தம்பதி இஸ்மாயில் சபுவான், 62, திருவாட்டி மரியா அப்துல் ஹமிது, 70. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!