நாட்டின் பாதுகாப்பில் குடும்பம், ஊழியருக்கும் பங்கு

சிங்கப்பூர் நன்கு பாதுகாக்கப்படு வதை உறுதிப்படுத்தும் பொறுப்பு குடும்பங்களுக்கும் ஊழியர்களுக் கும் இருக்கிறது என்று நாடாளு மன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். தேசிய சேவை என்பது வெறும் தேசிய சேவையாளர்களைப் பற்றி யதோ அல்லது தற்காப்பு ஏற்பாடு மட்டுமே அல்ல என்றார் அவர். மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், நேற்று என்எஸ்50 வெகுமதி வழங்கும் நிகழ்ச்சியிலும் குடும்பங் களுடனான விருந்திலும் கலந்து கொண்டார்.

மார்சிலிங் குடிமக்கள் ஆலோ சனைக் குழு, மார்சிலிங் பெண்கள் நிர்வாகக் குழு, மார்சிலிங் மண்ட லம் 6 வசிப்போர் குழு ஆகியவை ஏற்பாடு செய்த அந்த விருந்தில், அந்த வட்டாரத்தில் வசிக்கும் தேசிய சேவையாளர்கள், அவர் களின் குடும்பத்தினர் உள்ளிட்ட 200 பேர் கலந்துகொண்டனர். தேசிய சேவையின் 50வது ஆண்டையும் அன்னையர் தினத் தையும் கொண்டாடும் வகையிலும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் யப்பட்டது.

நாடாளுமன்ற நாயகரும் மார்சிலிங் அடித்தள அமைப்பு ஆலோசகருமான டாக்டர் ஹலிமா யாக்கோப் (நடு) டோ ஹோங் ஹுவா, 54, என்பவருக்கும் அவரின் புதல்வரான டோ சூவுக்கும் என்எஸ்50 சலுகை உறையை வழங்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!