உபி குடியிருப்பில் தீ; குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

உபி வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்தின் ஏழாவது மாடியில் நேற்று தீ முண்டது. ஏறத்தாழ 15 குடியிருப்பாளர் பத்திரமாக வெளி யேற்றப்பட்டனர். ஏழாவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டின் படுக்கையறையில் தீ முண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. தீப் பிடித்து எரிந்த வீட்டில் இருந்த மூவர் அவர்களாகவே அந்த வீட்டை விட்டு பத்திரமாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

பக்கத்து வீடுகளில் இருந்த ஏறத்தாழ 15 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிமைத் தற்காப்புப் படையினரும் போலிசாரும் பத்திர மாக வெளியேற்றினர். 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீயினால் ஏற்பட்ட புகையைச் சுவாசித்து அவுதியுற்றதால் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!