ஆயுள் காப்புறுதி தொழில்துறை 19% வளர்ச்சி

மார்ச் 31 முடிவடைந்த காலாண் டில் அமோகமான விற்பனை களுடன் வளர்ச்சியடைந்த சிங்கப்பூர் காப்புறுதி தொழில் துறையின் புதிய தொழில் சந்தாக்கள் சென்ற ஆண்டு முதல் காலாண்டைவிட 19 விழுக்காடு அதிகரித்து $811 மில்லியனை எட்டியது. சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதி சங்கம் திங்கட்கிழமை காலாண்டு முடிவுகளை அறிவித்தது. “விரைவாக மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவை களுக்கு ஏற்ப தொழில்துறை துரிதமாக மாற்றியமைத்துக் கொள்வது இந்தத் தொடர் வளர்ச்சிக்குக் காரணம், என்றார் சங்கத் தலைவர் திரு பேட்ரிக் டியோ.

‚“புதிய தயாரிப்புகளின் வடி விலும் காப்புறுதித் திட்டங்கள் வாங்குவதற்கான பல்வேறு வழி கள் மூலமாகவும் ஆயுள் காப் புறுதி நிறுவனங்கள் வாடிக் கையாளர்களுக்குக் கூடுதல் தெரிவுகளை வழங்குகின்றன. முகவர்கள், வங்கிகள், நிதி ஆலோசகர்கள் உள்ளிட்ட வெவ் வேறு வழிமுறைகளின் மூலம் அதிகரித்துவரும் ஈடுபாட்டு நடவடிக்கைகளில் இதைக் காணலாம்,” என்றார் அவர்.