நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடக்கம்

உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டத்துக்கான விண்ணப்பம் நேற்று முதல் பெறப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது. பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் தொடங்குகிறது. தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு, ஜிசிஇ சாதாரணநிலைத் தேர்வு ஆகியவற்றின் முடிவுகள் மட்டுமின்றி மாணவர்களின் திறமைகளையும் இதர சாதனைகளையும் கருத்தில் கொண்டு நேரடி மாணவர் சேர்க்கை திட்டம் மூலம் பள்ளிகள் மாணவர்களை ஏற்றுக்கொள்கின்றன. இந்த அணுகுமுறை மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் என்று கல்வி அமைச்சு கூறியது. நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டத்தில் 128 உயர்நிலைப் பள்ளிகளும் 18 தொடக்கக் கல்லூரிகளும் பங்கெடுக்கின்றன.