கடலில் மூழ்கிய 12 வயது பள்ளி

மாணவனின் உடல் நேற்று மூன்று மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது. ஜூரோங்வில் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவன் நேற்று காலை தேர்வு முடிந்த பிறகு தமது நண்பர்களுடன் கடலில் நீந்த ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைக்குச் சென்றிருந்ததாக ஜூரோங்வில் உயர்நிலைப்பள்ளியின் தலைமை யாசிரியர் திருவாட்டி இலேன் டான் தெரிவித்தார். சிறுவனின் மரணம் குறித்து அவர் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

பள்ளித் தலைவர்கள், ஊழியர்கள், ஆலோசகர்கள் ஆகியோர் மாண்ட சிறுவனின் குடும்பத்துக்கு உணர்வுபூர்வமான ஆதரவு தந்து வருவதாக அவர் கூறினார். சிறுவன் கடலில் காணாமல் போனதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு நேற்று பிற்பகல் 12.25 மணி அளவில் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3.33 மணிக்கு சிறுவனின் உடல் கிடைத்து விட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழு தெரிவித்தது. சிறுவனின் உடலுக்கான தேடுதல் பணி ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் 'ஈ' வட்டாரத்திலிருந்து பிடோக் படகுத்துறை வரை நடத்தப்பட்டது. சிறுவனின் மரணம் குறித்து போலிசார் விசாரணை நடத்து கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!