‘கிராப்ஷேர்’ கார் பகிர்வு சேவையில் இணையவுள்ள டாக்சிகள்

தனியார் வாடகை கார் நிறுவனமான 'கிராப்' தனது சேவைகளை விரிவுபடுத்தவுள்ளது. 'கிராப்ஷேர்' எனப்படும் அதன் கார் பகிர்வு சேவையில் அடுத்த வாரம் டாக்சிகளும் இணையவுள்ளன. வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும் பயணிகள் ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது கிராப்ஷேரின் சேவை. இம்மாதம் 16ஆம் முதல் தேர்தெடுக்கப்பட்ட டாக்சிகள் இச்சேவையை வழங்கும். கிராப் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் கிராப்ஷேர் சேவையை அறிமுகப்படுத்தியது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அந்நிறுவனம் 'ஜஸ்ட்கிராப்' எனும் சேவையைத் தொடங்கியது. அதன் மூலம் பயணத்திற்கு முன் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் டாக்சிகள் அல்லது தனியார் கார்களை எடுக்கலாம். ஒரே நேரத்தில் கிராப்ஷேர் மூலம் பல பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என்பதால் டாக்சி ஓட்டுநர்கள் வருமானத்தைப் பெருக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!