மூன்று மருந்தகங்களிடம் விளக்கம் கேட்டு கடிதம்

சமூக சுகாதார உதவித் திட்டத் தின் கீழ் (சாஸ்) மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் செய்ததாகக் கூறி செய்யாத மருத்துவ ஆலோசனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் கட்டணக் கோரிக்கை விடுத்த மூன்று மருந்தகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'பிடோக் டே அண்ட் நைட் மருந்தகம்', 'ஜூரோங் டே அண்ட் நைட் மருந்தகம்', கிராஸ் ஸ்திரீட்டில் உள்ள 'எம்டபிள்யூ மருத்துவ மையம்' ஆகியவற்றிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு சுகாதார அமைச்சு கடிதங்கள் அனுப்பியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் மருந்தகங்களிடமிருந்து திருப்திகரமான விளக்கம் கிடைக்காவிடில் அவற்றின் சாஸ் அங்கீகாரம் இடைநீக்கம் செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வழங்கப்படாத மருத்துவ ஆலோ சனைகள், சிகிச்சைகள் ஆகிய வற்றுக்கு அந்த மருந்தகங்கள் கட்டணக் கோரிக்கை விடுத்திருந் ததைக் கணக்குத் தணிக்கை மூலம் சுகாதார அமைச்சு கண்டு பிடித்தது. இம்மாதிரியான முறை கேடுகளைக் கடுமையாகக் கருது வதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சு, இந்த மூன்று மருந்தகங் கள் தொடர்பான விவகாரத்தை போலிசாரிடம் ஒப்படைத்துள்ள தாகக் கூறியது. முறைகேடு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்த சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தைக் கேட்டுக்கொள்ள இருப்பதாக அமைச்சு கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!