ஓய்வுபெற்ற மோப்ப நாய்களை வீடமைப்பு

வளர்ச்சிக் கழக வீடுகளில் வளர்க்கலாம் சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ‘கே=9’ பிரிவு, சிங்கப்- பூர் ஆயுதப் படையின் ராணுவ சேவை நாய் பிரிவு ஆகிய வற்றைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மோப்ப நாய்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகத் திட்டத்தின்கீழ் வீட மைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வளர்க்கப்பட லாம். இந்த ஓராண்டு அறிமுகத் திட்டம் ஏற்கெனவே நடப்பில் இருக்கும் ‘புரோஜெக்ட் அடோர்’ திட்டத்தின் விரிவாக்கமாகும். இத்திட்டத்தை இணைந்து வழிநடத்தும் தேசிய வளர்ச்சி அமைச்சு, உள் துறை அமைச்சு, தற்காப்பு அமைச்சு ஆகியவை, ‘புரோஜெக்ட் அடோர்’ திட்டத்திற்கு இதுவரை நல்ல வரவேற்பு கிடைத்- துள்ளதாகத் தெரிவித்தன.

சிங்கப்பூரின் பாதுகாப்புக்குப் பங்களித்துள்ள ஓய்வுபெற்ற மோப்ப நாய்கள் இனி வீவக வீடுகளில் வளர்க்கப்படலாம். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் ஆயுதப்படை