அறைக்குள் ஒரு ‘ரயில் நகரம்’

ரயில்கள் மீது தீராக்காதல் கொண்டுள்ள எஸ்எம்ஆர்டி ரயில் சேவைத் தூதர் ஒருவர் தமது அறைக்குள்ளேயே ஒரு ‘ரயில் நகர’த்தை உருவாக்கி இருக்கிறார். ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் பணியாற்றி வரும் 19 வயதான ஐசக் நேதனியல் டி’சூசா, மின்சாரத்தால் இயங்கும் ரயில்களின் மாதிரிகள், ரயில் தடங்கள், ரயில் தொடர்பான நினைவுச் சின்னங்கள் ஆகிய வற்றைக் கொண்டு ‘எஸ்எம் ஆர்டி’யைக் கருப்பொருளாகக் கொண்ட ஒரு மிகச் சிறிய ரயில் நகரமாகவே தமது அறையை மாற்றி அமைத்துள்ளார். இதன் தொடர்பில் எஸ்எம் ஆர்டி நிறுவனம் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் ஒரு காணொளி யைப் பதிவேற்றம் செய்துள்ளது. அந்தக் காணொளியில், ரயில்கள் மீதான ஆர்வம் தனக்கு மூன்று வயதிலேயே தொடங்கிவிட்டதாக டி’சூசா குறிப்பிட்டுள்ளார்.

ஈராண்டுகள் கடுமையாக உழைத்து குட்டி ‘ரயில் நகர’த்தை உருவாக்கிய டி’சூசா, 19. படம்: எஸ்எம்ஆர்டி