எஸ்எம்ஆர்டி நிர்வாக சபைகளுக்கு புதிய தலைவர்

எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷன், அதன் துணை நிறுவனமான எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ் ஆகிய வற்றின் நிர்வாக சபைகளுக்குத் தலைமை வகிக்கும் கோ யோங் குவான் ஜுலை 17ஆம் தேதி பதவி விலகுகிறார். அவர் இந்த இரண்டு நிறுவனங்களின் நிர் வாக சபைகளிலும் 10 ஆண்டு கள் தொண்டாற்றி இருக்கிறார். எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷன், எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ் ஆகியவற்றின் துணை தலை வராக இப்போது இருந்துவரும் சியா மூன் மிங் திரு கோவிட மிருந்து அந்த இரண்டு நிர்வாக சபைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்பார். திரு கோ அந்த இரண்டு சபைகளின் சுயேச்சையான இயக்குநராக 2007 முதல் இருந்து வந்துள்ளார். அவற்றின் தலைவராக 2009 முதல் அவர் பணியாற்றினார். எஸ்எம்ஆர்டி போக்குவரத்து நிறுவனத்தின் நிர்வாக சபைகள் திருத்தி அமைக்கப்படுவதை யொட்டி இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷன் அதன் துணை நிறுவனம் ஆகியவற்றின் இப்போதைய துணை தலைவர் சியா மூன் மிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்