விசாக தினக் கொண்டாட்டம்: ஆசி, அமைதி, நல்லிணக்கம்

சுதாஸகி ராமன்

முதிர்ச்சியையும் தளர்ந்துவிட்ட உடல்நிலையையும் பொருட்படுத் தாமல் 90 வயது திருவாட்டி அம்புஜம், செயின்ட் மைக்கல்ஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்க ராமாயா பௌத்த ஆலயத்திற்கு நேற்று வந்திருந்தார். விசாக தினத்தன்று கௌதம புத்தரின் ஆசிகளைப் பெறுவதற் காக ஆண்டுதோறும் புத்த கோயி லுக்குச் சென்றுவரும் அவர், கடந்த சில ஆண்டுகளாகவே தமது வீட்டிற்குப் பக்கத்தில் இருக் கும் ஸ்ரீ லங்கராமாயா பௌத்த ஆலயத்திற்குச் செல்கிறார். "லிட்டில் இந்தியா வட்டாரத்தில் குடியிருந்தபோது அங்குள்ள புத்தர் கோயிலுக்குச் சிறு வயதி லிருந்து சென்றுகொண்டிருந்தேன்.

நீண்ட தூரம் நடக்க இயலவில்லை என்பதால் என் பிள்ளைகள் வீட்டிற் குப் பக்கத்திலுள்ள இந்த ஆலயத் திற்கு அழைத்துவந்தனர்," என்றார் திருவாட்டி அம்புஜம். அமைதியான சூழலில் புத்தரின் ஆசிகளைப் பெறுவதற்காக தீவின் எல்லா பகுதிகளிலிருந்தும் பக்தர் கள் ஸ்ரீ லங்கராமாயா ஆலயத்திற்கு வந்திருந்தனர். விசாக தினத்தை விமரிசையாகக் கொண்டாடும் நோக்கில் நாள் முழுவதும் பல சிறப்பு வழிபாடுகளுக்கு ஆலயம் ஏற்பாடு செய்திருந்தது.

ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் சாக்கிய முனி பௌத்த காயா ஆலயத்தில் தமது மூன்று வயது மகனுடன் கௌரி, விஜயகுமார் தம்பதியினர் வழிபாடு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!