மலேசியாவில் பெண்களின் மனம் கவர்ந்து, பணம் கவர்ந்த சிங்கப்பூர் மன்மதன் கைது

சிங்கப்பூரரான 'மன்மதன்' ஒருவர் மலேசியா முழுவதிலும் பல மாதர் களைக் கவர்ந்து $162,000 தொகையை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரை மலேசிய போலிஸ் கைது செய்துள்ளது. அந்த மன் மதன் விதவை, ஒற்றைப் பெற்றோர் தாய்மார்களை அணுகுவார். காதல் வலை வீசுவார். தொழில்துறை வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப் படும் என்றும் அவர்களுக்கு ஆசை காட்டுவார். பணத்தை முதலீடு செய்யும்படி அல்லது கடன் வாங்கித் தரும்படி அவர்களிடம் அந்த மன்மதன் கூறுவார். அந்த 47 வயது ஆடவரின் கைவரிசை, கடைசியாக குளுவாங்கில் முடிவுக்கு வந்தது. அந்த மாவட்டத்தில் சில நாட் களுக்கு முன் குளுவாங் போலிஸ் அவரைக் கைது செய்தது. அவ ரின் 10 வயது பிள்ளையையும் போலிஸ் தன் வசம் வைத்துக் கொண்டது.

ஜோகூர், பேராக், மலாக்கா ஆகியவற்றில் மொத்தம் 500,000 ரிங்கிட் தொடர்பான விவகாரங் களில் அந்தப் பேர்வழிக்குத் தொடர்பு இருக்கிறது என்று கூறப் படுகிறது. கடைசியாக அந்தச் சந்தேகப்பேர்வழி சில மாதங் களுக்கு முன் ஒரு மாதை அணுகி னார். அந்த மாதுக்கு இரண்டு பிள்ளைகள். அவர் ஒரு விதவை. தன் தொழிலில் முதலீடு செய் யும்படியும் பெரும் வருவாய் கிடைக்கும் என்றும் மூன்று மாதங் களுக்குப் பிறகு அந்த 43 வயது மாதிடம் அந்தச் சந்தேக நபர் கேட்டார். முதலில் மாது தயங்கி னார். பிறகு 120,000 ரிங்கிட் முதலீடு செய்ய அவர் சம்மதித்தார். திருமணம் செய்துகொள்வதாகக் கூட அந்த நபர் அந்த மாதிடம் உறுதிபட சொன்னதாகத் தகவல் அறிந்த வட்டாரம் தெரிவித்தது. பிறகு அந்த மாதுக்கு வருவாய் எதுவும் வரவில்லை. ஆகையால் அவருக்குச் சந் தேகம் வந்துவிட்டது. போலிசிடம் புகார் தெரிவித்தார். அந்த சந்தேக நபர் மலேசியா வில் சட்டவிரோதமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்கி இருந்தார் என்று நம்பப்படுகிறது. அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!