ஜூலை 31 முதல் கோல்டன் ‌ஷூ ஃபுட் செண்டர் மூடல்; அருகே தற்காலிக கடைகள்

மத்திய வணிக வட்டாரத்தில் கடந்த 33 ஆண்டு காலம் செயல்பட்டு வந்த கோல்டன் ‌ஷூ ஃபுட் செண்டர் ஜூலை 31 ஆம் தேதி மூடப்படும். இருந்தாலும் அங்கு கிடைத்த பல உணவு வகைகளில் பெரும் பாலானவை பக்கத்தில் இருக்கும் தெலுக் ஆயர் எம்ஆர்டி நிலையத் திற்கு அருகே கிராஸ் ஸ்திரீட்டில் அமையும் தற்காலிக அங்காடிக் கடையில் தொடர்ந்து கிடைக்கும். இந்த நிலையம் இவ்வாண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி திறக்கப் படும். கோல்டன் ‌ஷூ ஃபுட் செண்டர் அமைந்துள்ள கட்டடம் 1984ஆம் ஆண்டுக் கட்டடம். இந்தக் கட்டடத்தை இடித்து விட்டு அங்கு 280 மீட்டர் உயர கட்டடத்தைக் கட்ட கேப்பிட்டல்லேண்ட் அண்ட் கமர்‌ஷியல் டிரஸ்ட் திட்டமிட்டு உள்ளது. அந்தப் புதிய கட்டடத்தில் ஓர் உணவு நிலையம் அமைந்து இருக்கும். அது அரசாங்கத்துக்கு சொந்தமானதாக இருக்கும். இருந்தாலும் அங்காடி நிலை யத் தொழில் நீடிப்பதை உறுதிப் படுத்த தற்காலிக நிலையத்தை இந்த டிரஸ்ட் அமைப்பு உருவாக்கி வருகிறது.

கோல்டன் ‌ஷூ ஃபுட் செண்டரில் செயல்படும் உணவுக்கடைகளில் பெரும்பாலானவை பக்கத்தில் கிராஸ் ஸ்திரீட்டில் அமையும் தற்காலிக நிலையத்துக்கு இடம் மாறும். கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!