போக்குவரத்துக்கு வழிகாட்டும் ‘ஆப்பிள் மேப்ஸ்’

'ஆப்பிள்' நிறுவனம் தனது 'மேப்ஸ்' செயலியில் சிங்கப்பூர் போக்குவரத்து திசைகளை இணைத்துள்ளது. இதைப் பயன் படுத்த விரும்பும் உள்ளூர் 'ஆப்பிள்' பயனாளர்கள், 'ஆப்பிள் மேப்ஸ்' செயலியிலிருந்து வெளி யேறி, மீண்டும் தொடங்கினால் அந்தச் செயலியில் 'டிரான்சிட்' தெரிவைக் காணலாம். பேருந்து, எம்ஆர்டி ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குச் செல்வதற்கு முழு மையாக, ஒவ்வொரு படிநிலையாக வழிகாட்டுகிறது இந்த 'டிரான்சிட்' தெரிவு. தங்களது இலக்கை அடை வதற்கு எது சிறந்த எம்ஆர்டி வெளிவழி அல்லது தளமேடை என்பதையும் அது குறிப்பிட்டுக் காட்டுகிறது.

பயனாளர்களுக்குக் குழப்பம் ஏற்படாத வகையில் உள்ளூரில் பயன்படுத்தப்படும் குறியீடுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. துல்லிய மான, அதே படங்களுக்காகத் தேவைப்பட்ட இரண்டு எழுத் துருக்களைப் பெறுவதற்காகவே கலிஃபோர்னியாவில் இருந்து 'ஆப்பிள் மேப்ஸ்' குழு சிங்கப்பூர் வந்து சென்றது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் உட்பட உலகம் முழு வதும் 40க்கும் மேற்பட்ட பெரு நகரங்களில் 'ஆப்பிள் மேப்ஸ்' செயலியின் 'டிரான்சிட்' வசதி கிடைக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!